தமிழகம்

மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக நெல்லை கண்ணன் தேர்தல் பிரச்சாரம்

குள.சண்முகசுந்தரம்

காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர் நெல்லை கண்ணன், தமிழகம் முழு வதும் மக்கள் நல கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத் தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக நெல்லை கண்ண னிடம் கேட்டோம். மக்கள் நல கூட்ட ணியை ஆதரித்து நான் எனது முக நூல் பக்கத்தில் எழுதினேன். அதற்கு வைகோ போனில் நன்றி கூறினார்.

நான் பொது வேட்பாளராக போட்டி யிட வேண்டும் என்பது மக்கள் நல கூட்டணியினரின் ஆசையாக இருக்க லாம். ஆனால், வயதாகிவிட்ட காரணத் தால் எனக்கு எந்த ஆசையும் இல்லை.

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. ஜெயலலிதாவின் தலைமைப் பண்பு எனக்குப் பிடிக்கும். காமராஜரைப் போல புகழடைய வேண்டிய அவர் சசிகலா கூட்டத்தினரால் தனது தனித் துவத்தை இழந்துவிட்டார். கட்சியும் ஆட்சியும் இப்போது அவரது கட்டுப் பாட்டில் இல்லை.

யாரையும் சட்டை செய்யாத அரசாங்கம் இப்போது நடக்கிறது. எதிர்க் கட்சிகளை பேசவே விடமாட்டேன் என்று சொன்னால் சட்டமன்றம் எதற்கு? போலீஸை மட்டுமே வைத்து ஆட்சி செய்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. இவர் இப்படி என்றால் கருணாநிதி தனது குடும்பத்துக்காக மட்டுமே கட்சி நடத்துகிறார். அப்படி இல்லாவிட்டால், ஒன்றும் தெரியாத அழகிரிக்கு பதிலாக அனைத்தும் அறிந்த திருச்சி சிவாவை மந்திரி யாக்கி இருப்பாரே.

அண்ணா உருவாக்கிய திமுகவை, கருணாநிதி ஜனநாயக நெறிப்படி வழிநடத்துபவராக இருந்தால் ஒரு முறையாவது அன்பழகனை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பாரா? தமிழகத்தில் காங்கிரஸே இல்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிந்துவிட்டது. இங்கே உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேருமே கருணாநிதியின் கைகூலிகள்; உழைப்பு திருடிகள். அதனால்தான் திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

சீமானும், தமிழருவிமணியனும் எனக்கு ரொம்ப பிரியமானவர்கள். ஆனால், 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்துவோம் என இவர்கள் எந்த தைரியத்தில் சொல் கிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் நல கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT