தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

செய்திப்பிரிவு

தமிழக தலைமைச் செயலர் கு.ஞான தேசிகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முன் னாள் செயலாளர் கே.ராஜாராமன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராகவும், பெரம் பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தாரஸ் அகமது மாநில ஊரக சுகாதார திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பணியில் இருந்து தமிழகம் திரும்பிய கூடுதல் தலைமை செயலர் அம்புஜ் சர்மா, தொழில் மற்றும் வர்த்தகத்துறை இயக்குநராகவும், நிதித்துறை (செலவினம்) செயலராக இருந்த டி.உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயல ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உதயச்சந்திரன், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.

சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநராக இருந்த சந்தீப் நந்துரி மதுரை மாநகராட்சி ஆணையராக வும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் எம்.ஆசியா மரியம், சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT