ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக, தட்டச்சு நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள பயிற்சி நிலையத்தில் தனிமனித இடைவெளியுடன் நேற்று பயிற்சியை தொடங்கிய மாணவர்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

வணிகவியல் பயிலகம் 50% பேருடன் இயங்க அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த வணிகவியல் பயிலகங்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பதிவு பெற்று, 3,500-க்கும் மேற்பட்ட வணிகவியல், தட்டச்சுப் பயிலகங்கள் செயல்படுகின்றன. கரோனா 2-ம் அலை தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பயிலங்கள் செயல்படாமல் உள்ளன.

இந்நிலையில், கரோனா தாக்கம் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதுதொடர்பாக வணிகவியல்பயிலகங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுப்பியசுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பு காரணமாகதமிழகம் முழுவதும் வணிகவியல் பயிலகங்கள் மூடப்பட்டிருந்தன.

தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், அரசின் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் பயிலகங்கள் 50சதவீத மாணவர்களுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் அனைத்து தட்டச்சுப் பயிலகங்களும் அரசின் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT