தமிழகம்

சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளி களை கைது செய்த போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.

குற்றம் நடந்த சிறிது நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த மற்றும் முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகளை கைது செய்த 26 போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சிறப்பாக பணிபுரிந்த புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலைக் காவலர்கள் சரவணக்குமார், மதன்மோகன், காவலர் ஞானமணி, இளைஞர் படைக்காவலர் எபனேசர், அரும்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலைக் காவலர்கள் எம்.குமார், எஸ்.மூர்த்தி, சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.குமார், முதல்நிலைக் காவலர் எம்.அறிவழகன், இளைஞர் படைக் காவலர் ஷேக்முபாரக், வேப்பேரி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சீனிவாசன், இளைஞர் படைக் காவலர் அக்ரம் பாட்ஷா, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் எம்.ஜேம்ஸ், எம்.சந்தோஷ்குமார், முதல்நிலைக் காவலர் கே.கருப்பையா, இளைஞர் படைக்காவலர் எஸ்.கண்ணபிரசாத், வேளச்சேரி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வி.அந்தோணிசாமி , தலைமைக் காவலர் கே.ரவி, ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் பி.கிரியப்பன், குமரன் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் எம்.துரைராஜ், இளைஞர் படைக்காவலர் ஆர்.சங்கர், ஆயுதப்படைக் காவலர் மணிகண்டன், சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.ஆண்டவன், முதல்நிலைக் காவலர் எம்.அறிவழகன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பி.கோவிந்தராஜ், செங்குன்றம் உதவி ஆய்வாளர் ஜி.கோபிநாத், காவலர் ஜானகிராமன் ஆகிய 26 போலீஸாரை சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று காலையில் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, கே.சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT