தமிழகம்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைமையில் ‘புதிய சக்தி அணி’ தொடக்கம்

செய்திப்பிரிவு

லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைமையில் தேர்தலை சந்திக்க ‘புதிய சக்தி அணி’ எனும் பெயரில் ஒரு அணி உருவாகியுள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தலைமையில் லோக் சத்தா கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், ஊழல் எதிர்ப்பு இயக்கம், மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 51 அமைப்புகள் இணைந்து இந்த அணியை உருவாக்கியுள்ளன.

இந்த அணியை அறிமுகம் செய்து வைத்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘234 தொகுதிகளிலும் நேர்மையான நபர்களை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். மார்ச் 3-வது வாரம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடுநிலை எண்ணம் கொண்ட மக்கள் எங்கள் அணி வேட்பாளரை ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT