தமிழகம்

அவ்வையார் விருதுக்கு பிப்ரவரி 5-க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அவ்வையார் விருதுக்கு தகுதியுள்ளோர் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று அறிவித்துள்ளதாவது:

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட சிறப்பாக பணியாற்றிய, தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு ‘ அவ்வையார் விருது ’ இந்தாண்டு மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தின விழாவில் வழங்கப்படுகிறது.

ஆகவே, சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கையை, மொழி, இனம், பண்பாடு, கலை , அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் பெண்கள், ‘அவ்வையார் விருது ’பெறுவதற்கான விண்ணத்தை இம்மாதம் 5-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கு.கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT