தமிழகம்

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தின் மழைக்கா லக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை கொண்டு வரும் ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தின் வாயிலாக படகின் நீளத்தை அதிகரிக்க கூடாது.

என்ஜினின் பவரைஅதிகரிக்க கூடாது என ஏராள|மான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இச்சட்டத்தை நிறைவேற்றினால், விசைப்படகுகளின் திறன் மட்டுப்படுத்தப் படும். இதனால் எதிர்காலத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் நசிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்படுமானால், சாதாரண கட்டுமரங்கள், பாய்மரப் படகுகள், வெளியில் இயந்திரம் பொருத்தி இயக்கும் வல்லங்கள், கனரக இயந்திரங்கள் பொருத்தி இயக்கப்படும் விசைப்படகுகள் உள்ளிட்டவைகள் வணிகக் கப்பல்கள் சட்டம் 1958-இன் கீழ் பதிவு செய்யவேண்டும்.

100-க்கும் மேற்பட்ட கப்பல் கள் வைத்திருக்கும் பெரிய நிறுவ னங்களும், ஒரே ஒரு கட்டு மரம் வைத்திருக்கும் எளிய மீனவனும், ஒரே மாதிரியான முதலாளிகள் என்று இச்சட்டம் கூறுகிறது. இதன் காரணமாகவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுகின்றன.ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இச்சட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது, மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளக் கூடிய கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT