கோப்புப்படம் 
தமிழகம்

மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: புதுச்சேரி பாஜக

செய்திப்பிரிவு

புதுச்சேரி லாஸ்பேட் சட்டப்பேரவைத் தொகுதிபாஜக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மக்கள் நலன் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் புதுச்சேரி பாஜக எதிர்க்கும். தமிழகத்துக்கு தண்ணீர் குறைந்தால் காரைக்காலுக்கும் நீர் வரத்து குறையும். குறிப்பாக மேகேதாட்டு அணையால் தண்ணீர் வரத்து குறையும். புதுச்சேரி மாநில நலனை பாதிக்கும் எந்த விஷயத்தையும் பாஜக எதிர்க்கும். மேகேதாட்டுவில் அணை கட்டினால் புதுச்சேரி விவசாயிக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம். தேசிய தலைமையிடமும் எடுத்துக் கூறுவோம்.

பாஜக கூட்டணி அரசு இங்குள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்தால் பாஜக ஆதரிக்கும். அத்துடன் இங்குள்ள குழுவை நேரடியாக மத்திய அரசை சந்திக்க ஏற்பாடு செய்வோம்.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாஜக துணை நிற்கும். அணை கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT