விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் தலையில் வெட்டுக் காயங்களுடன் சிகிச்சைப் பெறும் நதியா. 
தமிழகம்

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் விருத்தாசலத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 9 பேர் காயம்

செய்திப்பிரிவு

விருத்தாசலம் காந்தி நகரில் இடப்பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இருதரப்பினரும் வெட்டிக் கொண்டனர். இதில் 9 பேர்காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விருத்தாசலம் காந்திநகரில் வசிக்கும் மாலா(70) என்பவருக்கு சொந்தமான இடத்துக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை சந்திராகாசு என்பவரது வாரிசுகள் அனுபவித்து வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் மாலாவின் பிள்ளைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித் தனர். இந்நிலையில் இரு தரப் புக்கும் இடையே தகராறு எழுந் துள்ளது. இதையடுத்து இரு தரப் பினரும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் பயங்கர ஆயுதங்க ளுடன் மோதிக் கொண்டனர்.இதில் மாலா, நதியா (30), வெங்கடேசன் (35), மற்றொரு தரப்பில் கொளஞ்சி (34) ராமச்சந்திரன் (30), ராஜா (27), மணிகண்டன் (31), பவானி (27) மற்றும் கவிதா (27) ஆகியோர் காயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தா சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த விருத்தாசலம் டிஎஸ்பி மோகன் மற்றும் ஆய்வாளர் விஜயரங்கன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நதியா கூறுகையில், "இடப்பிரச்சின தொடர்பாக ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம்.

ஆனால் காவல் துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பிரச்சினை ஏற்பட்டது"என்று தெரிவித்தார்.

காவல்துறையில் விசாரித் தபோது, "மீனவர்கள் பிரச்சி னைக்காக போலீஸார் கடலூ ருக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்தனர். அதனால் இவ் வழக்கை விசாரிக்க முடியாமல் போனது" என்றனர்.

SCROLL FOR NEXT