தேனி மாவட்டம் மஞ்சனூத்து மலை கிராமத்துக்கு காஸ் சிலிண்டர்களை வாகனங்களில் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தலைச்சுமையாக இவற்றை தூக்கிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங் கள் உள்ளன. இதில் வருசநாடு அருகே மஞ்சனூத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இலவச காஸ் இணைப்பு வழங்கியது. இவர்களுக்கு கடமலைக்குண்டு தனியார் ஏஜென்ஸி மூலம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் சில வாரங் களாக வாகனங்கள் இக்கிராமத் துக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காஸ் சிலிண்டர்களைப் பெற முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே 10 கி.மீ. தூரத்தில் உள்ள கோரையூத்தில் இருந்து இரு சக்கர வாகனம் அல்லது தலைச் சுமையாக சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு செல் கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள்(73) என்பவர் கூறுகையில், எங்கள் கிராமத்துக்கு சிலிண்டர்களை வாகனங்களில் கொண்டு வர வனத்துறை தடை விதித்துள்ளது. வயதானவர்களால் சிலிண்டரை தூக்கி வர முடி யாததால் பலரும் விறகு அடுப் புக்கு மாறி வருகிறோம். என்றார்.
இது குறித்து வனத் துறை அலு வர்கள் கூறுகையில், இப்பகுதி புலிகள் வனச் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே கட்டுப் பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றனர்.