தமிழகம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ‘வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தால் ரூ.200, தேர்ச்சி பெற்றால் ரூ.300, 12-ம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகலை இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT