தேசிய அளவிலான செயல்வழிக் கற்றல் திட்ட போட்டிகளில் சிறப் பிடம் பெற்ற அரசு பள்ளி மாண வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா பாராட் டுச் சான்றிதழ்களையும், பரிசுக் கோப்பைகளையும் வழங்கினார்.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் படைப்பாற்றலையும், புதுமைச் சிந்தனையையும் வெளிக்கொண்டு வரும் வண்ணம் அவர்கள் புதிய செயல் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாணவர்களின் சிறந்த செயல்திட்டங்களை தேர்வு செய்யும் வகையில் டிசைன் பார் சேஞ்ச் அமைப்பு தேசிய அளவில் கடந்த ஆண்டு ஒரு போட்டியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் 2,512 செயல்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து மட்டும் எஸ்எஸ்ஏ மூலம் 1,400 அரசு பள்ளிகள் செயல்திட்டங்களை சமர்ப்பித்தன. தேசிய அளவில் சிறந்த 100 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றில் 23 பள்ளிகள் தமிழகத் தைச் சேர்ந்தவை. தேசிய அளவில் முதல் 5 இடங்களில் தேர்வுசெய் யப்பட்ட பள்ளிகளில் வில்லி வாக்கம் ஒன்றிய ஐயப்பா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யும் ஒன்றாகும். அந்த பள்ளி மாண வர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வடிவமைத்த சுவர் செயல்திட்டம் தேசிய அளவில் முதல் 5 இடங்களில் இடம்பெற்றது. இதற்காக அப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும், முதல் 20 இடங்களைப் பிடித்த 5 பள்ளி களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டன.
தேசிய அளவில் நடந்த செயல்வழிக்கற்றல் திட்ட போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா கலந்துகொண்டு மாணவ-மாணவி களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களையும், பரிசுக் கோப்பை களையும் வழங்கினார். மாணவர் களை ஊக்குவித்த ஆசிரியர் களுக்கு எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சான்றிதழ்களை வழங்கி கவுர வித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், எஸ்எஸ்ஏ இணை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், டிசைன் பார் சேஞ்ச் அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் நந்தினி சூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.