இட ஒதுக்கீட்டை சரியாக அமல் படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய இதர பிற்படுத்தப் பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் வி.டி.ஏ.ரங்க ராஜன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கே.விஸ்வநாதன் வரவேற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரை நிகழ்த்தினார்.
மண்டல் குழு அறிக்கை அமலாகி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றாக்குறை பணியிடங்களை கண்டறிந்து உடனே அறிவிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களை நிரப்ப தனித் தேர்வு நடத்த வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.