தமிழகம்

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் ‘சில்க் விஸ்டா’ கருவி மூலம் ரத்த நாள சிகிச்சை: டாக்டர் எம்.ஜே.அருண்குமார் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை ஹானா ஜோசப் மருத் துவமனை `சில்க் விஸ்டா' என்ற புதிய கருவி மூலம் தென்னிந்தி யாவிலேயே முதன்முறையாக ஃபுளோடவர்டர் ரத்த நாள சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை யின் நிறுவனர் டாக்டர் எம்.ஜே.அருண்குமார் கூறியது:

நான்கு மாதங்களாக தலைவலி, மயக்கத்தால் அவதிப்பட்ட 48 வயது நபர் ஒருவர் எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவரது எம்ஆர்ஏ ஸ்கேன் அறிக்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதையடுத்து எங்களது கேத் ஆய்வகத்தில் அவரது மூளை யை முப்பரிமாண சுழற்சி ஆஞ்சியோகிராம் படமெடுத்துப் பார்த்தபோது தலைவலி மற்றும் மயக்கத்துக்கான காரணத்தை அறிய முடிந்தது.

அவரது மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பால்ட் எண்டோவாஸ்குலர் நிறுவ னத்தின் `சில்க் விஸ்டா' கருவி மூலம் அவருக்கு எண்டோவாஸ்குலர் சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டது. மூளை ரத்தக்குழாய் வீக்கத்தை எங்களால் முழுமையாக அகற்ற முடிந்ததோடு, எந்தவித நரம்பியல் ரீதியான கோளாறுகளுமின்றி 7 நாட்களில் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. இந்த `சில்க் விஸ்டா' தொழில்நுட்பக்கருவி,கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் ஐரோப்பாவில் அறிமுகப்படுத் தப்பட்டது, என்றார்.

SCROLL FOR NEXT