கோப்புப்படம் 
தமிழகம்

கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி 4 மாதங்களுக்கு பின் கைது: நீதிமன்றத்தால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் சென்றாயன் (39). இவர் கடந்த மார்ச் 10-ம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வனிதா (35) கொடுத்த புகாரில் சந்தேக மரணமாக நிலக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சென்றாயனின் தந்தை மொக்கைராஜ், தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை நிலக்கோட்டை போலீஸார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கினர்.

சென்றாயன் மனைவி வனிதாவின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அய்யனார் (48) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இது சென்றாயனுக்கு தெரியவே வனிதாவை கண்டித்துள்ளார். ஆசிரியருடன் பழகுவதற்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்யத் திட்டமிட்ட வனிதா, அய்யனாரை வீட்டுக்கு அழைத்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சென்றாயனை இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் வனிதா தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி வனிதாவை கைது செய்து ஆசிரியர் அய்யனாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT