பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்குகிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். உடன், ஆட்சியர்  வெங்கடபிரியா, எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் ரூ.10.34 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 431 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் 431 பயனாளிகளுக்கு ரூ.10.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மற்றும் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ‘உங்கள் தொகுதி யில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெரம் பலூர் மாவட்டத்தில் 3,703 மனுக் கள் பெறப்பட்டு, அவற்றில் 1,190 மனுக்கள் ஏற்கப்பட்டு, முதற் கட்டமாக குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 260 பேருக்கு ரூ.6.26 கோடி மதிப்பிலும், பெரம் பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக் குட்பட்ட 171 பேருக்கு ரூ.4.08 கோடி மதிப்பிலும் என மொத்தம் 431 பேருக்கு ரூ.10.34 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

பின்னர், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச் சியில், கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் மற்றும் செவிலியர் களுக்கு பாராட்டுச் சான்றுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், வேர்ல்டு விஷன் தன் னார்வலர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.15 லட் சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், 25 கட் டில் மற்றும் படுக்கைகள், 180 பி.பி கிட் ஆகியவற்றை வாலிகண்டபுரம் அரசு மருத்துவமனைக்கு அமைச் சர் வழங்கினார்.

தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் டிஆர்டிஓ மூலம் அமைக்கப்பட்டுள்ள ரூ.95 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந் திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், பெரம் பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT