காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் தஞ்சை தலைமை அஞ்சலகம் எதிரில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜயகாந்தின் உத்தரவுப்படி, அங்கு பேருந்து நிழற்குடையில் பொருத்தப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் அகற்றினர்.
இது தொடர்பான புகாரின்பேரில், விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் தேமுதிக நகரச் செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். விஜயகாந்த் உள்ளிட்ட 9 பேர் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
ஜாமீன் காலம் அடுத்த வாரம் முடிவடைவதால், ஜாமீன் நீட்டிப்புக்காக தஞ்சை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 25) நேரில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.