தமிழகம்

உலக இளைஞர் திறன் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

உலக இளைஞர் திறன் நாளைமுன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

உலக இளைஞர் திறன் நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

வளர்ச்சிக்கான வித்துக்கள்

இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழக இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் ‘திறன் மேம்பாட்டுத் துறை’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT