மதுரை அருகே கடச்சனேந்தலில் உள்ள அரசு அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் அர.சக்கரபாணி, மூர்த்தி. உடன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறையில் நடந்த ஊழல் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியில் உணவுத் துறையில் நடந்துள்ள ஊழல்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

மதுரை அருகே கடச்ச னேந்தலில் அரசு அரிசி ஆலை மற்றும் ரேஷன் கடையில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் மதுரை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர்கள் அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஆனந்த்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறிய தாவது: தமிழகத்தில் நேற்று வரை 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத் துறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஊழல் நடந்துள்ளது என்பதற்குப் பருப்பு கொள்முதல் ஒன்றே போதும். தற்போது வெளிப்படையான பருப்பு கொள்முதல் மூலம் ரூ.84 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்களை பாக்கெட் வடிவில் கொடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும், என்றார்.

          
SCROLL FOR NEXT