தமிழக மீனவர்கள் ரோலர்களை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதால், இலங்கை வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சிறுவர் விவகார அமைச்சர் விஜயக்கலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனி யார் திருவிழாவில் இலங்கை அரசு சார்பில் விஜயக்கலா மகேஷ்வரன், இந்தியா சார்பாக யாழ்ப்பாண துணைத் தூதர் என்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் விஜயக்கலா மகேஷ்வரன் கூறியதாவது:
கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயம் புதிதாகக் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்படும் தேவாலயம் இந்திய-இலங்கை நட்புறவுக்கு பாலமாகத் திகழும். இலங்கை அதிபராக சிறிமாவோ பண்டாரநாயக்கா இருந்தபோது கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப் பட்டது. இதை மீண்டும் இந்தி யாவுக்கே திருப்பித்தருவது நடை முறை சாத்தியமில்லை.
தமிழக மீனவர்கள் ரோலர் களைப் பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்ப தால் வடமாகாணங்களில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. இப்பிரச்சினையை இரு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இலங்கை முகாம் களில் உள்ள தமிழர்கள் மீள்குடி யேற்றம் முடிவடைந்த பின்னர் தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் தாயகத்துக்கு அழைக்கப் படுவார்கள் என்று அவர் கூறினார்.