மூன்றாவது கட்ட பிரச்சாரத்துக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் மதிமுக பிரமுகரின் இல்லத் திருமணத்தில் நேற்று கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்டப் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்டப் பிரச்சாரம் மார்ச் 1-ம் தேதி தொடங்கி திருவள்ளூர், வேலூர், தருமபுரி உட்பட 8 மாவட்டங்களில் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 4-வது கட்டப் பிரச்சாரம் தென்மாவட்டங்களில் நடைபெறும். வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்ச செயல் திட்டங்களை விளக்கி மக்களிடம் பிரசுரங்கள் விநியோகித்து வருகிறோம். 3-வது கட்டப் பிரச்சாரத்துக்குப் பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.