*
எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யும் சிறப்பு மாற்று கலந்தாய்வு சென்னையில் இன்று நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக் குறிச்சியை அடுத்த பங்காரம் கிரா மத்தில் இயங்கி வந்த எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத் துவக் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த பிரியங்கா, சரண்யா மற்றும் மோனிஷா ஆகியோரின் உடல்கள் கல்லூரி அருகே கிணற் றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்திவரு கின்றனர். கல்லூரிக்கு சீல் வைக் கப்பட்டதால், மாணவ, மாணவிகள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற னர்.
இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அனைவரை யும், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் மாணவ, மாணவிகளை அரசு கல்லூரிக்கு மாற்றுவதற்கான சிறப்பு கலந்தாய்வு அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத் தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இதுதொடர்பாக இந்திய மருத் துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பெயரை பதிவுசெய்து எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி யில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் படித்து வந்த அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மாற்று கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும்போது மாணவ, மாணவிகள் கல்லூரி நிர் வாகத்தால் வழங்கப்பட்ட அடை யாள அட்டை (Identify Card) அல் லது மற்ற ஏனைய ஆவணங்கள், பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்ற ஏதேனும் ஒரு அசல் அடை யாளச் சான்றிதழ், பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் தேர்வுக்கான நுழைவுச் சான்றிதழ், எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியால் வழங்கப்பட்ட கல்விக் கட்டண ரசீது இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்.
அழைப்புக் கடிதம் கிடைக் கப் பெறாதவர்களும் தகுந்த ஆவ ணத்துடன் கலந்தாய்வில் பங்கேற் கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வுக் குழு அலுவலகத்தை 044-26216244 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்று அவர்கள் கூறினர்.
கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி உட்பட 4 பேரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
குற்றவாளிகளைத் தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
மூன்று மாணவிகள் கொலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறது. மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக மற்ற மாணவ, மாணவியரை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், அவர்களுக்கு முடிவுரை எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் மாணவர்களால் எழுப்பப்படும் சந்தேகங்களை அடியோடு புறந்தள்ளிவிட முடியாது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் இயற்கை மருத்துவக் கல்லூரியை நடத்தி வந்த வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் சுவாக்கர் வர்மா ஆகியோர், அதை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை ஒடுக்குவதற்காகவே பெரு.வெங்கடேசன் என்ற கூலிப்படைத் தலைவனை நியமனம் செய்திருந்தனர். கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக அவர் எந்த நேரமும் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவிகளை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்பாவி மாணவிகள் 3 பேரின் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை தமிழக காவல்துறை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டும்.