திண்டிவனம் அருகே வீடுர் அணை யில் ரூ.42.44 கோடி மதிப்பீட்டில் அணையின் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியினை அமைச்சர் மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார்.
திண்டிவனம் அருகே வீடுர் அணை வராகநதி மற்றும் தொண் டியாறு ஒன்று சேரும் இடத்தில் 1958-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
வராகநதி மற்றும் தொண்டியாறு செஞ்சி அருகே பாக்கம் மலைத்தொடர் மற்றும் தொண்டூர் ஏரி உபரி நீரிலிருந்தும் உற்பத்தியாகி வீடுர் அணையின் சுமார் அரை கீ.மீ முன்னே ஒன்று சேர்ந்து பிறகு அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரி அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காவலங்களில் நீரோட் டம் பெறுகிறது.
இந்த அணையின் மொத்த நீளம் 4,500 மீட்டர், உயரம் 32 அடி மற்றும் கொள்ளளவு 605 மில்லியன் கன அடி. வீடுர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. மற்றும் 5 கிளை வாய்க்கால்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வீடுர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் 109.00 மில்லியன் கன அடிக்கு வண்டல் மண் படிந்து வீடுர் அணையின் கொள்ளளவு 496.00 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது என 2009-ம் ஆண்டு கொள்ளளவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் ரூ.42.44 கோடி மதிப்பீட்டில் வீடுர் அணையின் கட்டுமானங்களை புனரமைத்தல், பிரதான பாசன கால்வாய்களை தூர் வாருதல் மற்றும் கிளை கால்வாய்களை தூர்வாருதல்,பிரதான பாசன கால்வாயை கான்கீரிட் கால்வாயாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது திண்டிவ னம் உதவி ஆட்சியர் அமித், மயிலம்எம்எல்ஏ சிவக்குமார், பொதுப் பணித் துறையின் பெண்ணையாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர், செயற்பொறி யாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் சண்முகம், கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.