அண்ணாகிராம ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் திட்டிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். 
தமிழகம்

அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் ரகளை

செய்திப்பிரிவு

அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே ரகளை ஏற்பட்டது.

அண்ணாகிராமம் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் ஜானகிராமன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. துணைத்தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் ஒன்றிய மேலாளர் மீரா, தீர்மானம் படித்துக்கொண்டிருந்தார்.

அவர் 96-வது தீர்மானமான அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களை பழுது நீக்கம்செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான செலவினங்களை ஒன்றியபொது நிதியில் மேற்கொள்ள அனுமதி வைக்கப்படு கிறது என்று படித்தார்.

அப்போது அதிமுக கவுன்சிலர் கரும்பூர்ஜெயச்சந்திரன் எழுந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. பொது நிதியில் இந்தபணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து திமுக கவுன்சிலர் ராஜசேகர்எழுந்து ஆவேசமாக பேசினார். இருவரும் தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டனர்.

ஒருவரை ஒருவர் தண்ணீர் பாட்டி லால் வீசி தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். சிறிது நேர பரபரப்புக்கு பின்னர் மீண்டும் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் குடிநீர்வசதி, சாலை பணி, தெருவிளக்கு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்சேகர் நன்றி கூறினார்

SCROLL FOR NEXT