திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று கோவை விமான நிலையத்துக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்த லுக்கானக் கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை. டெல்லி மேலிடத் தில் இருந்து முக்கியத் தலைவர்கள் யாரேனும் கூட்டணி குறித்து திமுகவிடம் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வரும்.
அதிமுகவினரின் ஸ்டிக்கர் பிரச் சாரம் நாடு முழுவதும் தெரிந்த ஒன்று. மணமக்கள் தலையில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள், இனி தாலி யில் கூட ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்.
தமிழகத்தில் தற்போது ஸ்டிக் கர் ஆட்சியே நடைபெற்று வருகி றது. அதிமுக 5 ஆண்டு கால ஆட்சியில் மிகப் பெரிய அளவில் அமைச்சர்களை மாற்றி உள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் லஞ்சம் தமிழகத்தில் கரைபுரண்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ரூ. 8 கோடி முதல் 10 கோடி வரை லஞ்சம் கைமாறி யிருப்பதாக கூறப்படுவதே பெரிய சாதனை என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறும்போது, ‘திமுக கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர் பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட குலாம் நபி ஆசாத், வரும் சனிக் கிழமை தமிழகம் வருவது உறுதி. ஆனால், யாரை சந்திக்க உள்ளார் என்பது தெரியவில்லை’ என்றார்.