தமிழகம்

கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டியில் ஈடுபடுவோர் மீது கடும் நட வடிக்கை எடுக்க மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தமிழக டிஜிபியாக சைலேந் திரபாபு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நேற்று முன் தினம் மதுரை வந்தார்.

இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் தென் மண்டல அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தென் மண்டலத்தில் ரவுடிகளுக்குள் மோதல்கள் நடந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரவுடிகள் மீதான நிலுவை வழக்குகளைத் துரிதப்படுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரை தரம் பிரித்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை டிஜிபி அறிவு றுத்தினார்.

கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து சிகிச்சையிலுள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும் பத்துக்கு ரூ.50 ஆயிரம் உத வித்தொகையை அவரது மக ளிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அன்பு, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா (மதுரை), டிஐஜிகள் காமினி (மதுரை), விஜயகுமாரி (திண்டுக்கல்), மயில்வாகனன் (ராமநாதபுரம்) மதுரை காவல் துணை ஆணையர்கள் தங்கதுரை, ராஜசேகரன், ஸ்டாலின், காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ் கரன் (மதுரை) ரவளி பிரியா (திண் டுக்கல்), டோங்ரே பிரவின் உமேஷ் (தேனி), செந்தில்குமார் (சிவகங்கை), இ.கார்த்திக் (ராம நாதபுரம்), மனோகர் (விருதுநகர்) ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த டிஜிபிக்கு ஆயுதப்படையினர் சார்பில் மரி யாதை வழங்கப்பட்டது. பின்னர் டிஜிபி திருச்சி சென்றார்.

SCROLL FOR NEXT