புதுப்பிக்கப்பட்ட அணைக்கட்டு எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன். அருகில், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதியின் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச் சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் பாபு (மேற்கு), ஞானசேகரன் (வேலூர்), பாண் டியன் (கிழக்கு), வெங்கடேசன் (மத்திய), தொரப்பாடி பகுதிச் செயலாளர் ஐயப்பன், அல்லாபுரம் பகுதிச்செயலாளர் தங்கதுரை, மாநகர அவைத்தலைவர் ஆறுமுகம், மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் மணிமாறன், பேரூராட்சி செயலாளர்கள் பாஸ்கரன் (ஒடுக்கத்தூர்), குமார் (பென்னாத்தூர்), செல்வம் (பள்ளிகொண்டா), கணியம்பாடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT