சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று (13-ம்தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்துக்கு வந்தார். அவரை அதிமுகமாவட்டச் செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அவரை தெற்குதொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் சந்தித்தனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பழனிசாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.