தமிழகம்

மாணவிகளிடம் ஆபாச பேச்சு: கைதான ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஹபீப் முகம்மது(36) ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் விசாரணை செய்து கடந்த ஜூன் 22-ம் தேதி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து பரமக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். விசாரணையில் மாணவிகள் பலரிடம் ஆசிரியர் ஆபாசமாகப் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட எஸ்பி கார்த்திக், ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவின்பேரில் ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT