இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலர் சலீம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். அருகில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள். படம்: செ. ஞானபிரகாஷ் 
தமிழகம்

அரசு நிர்வாகம் செயல்பட வலியுறுத்தி வரும் 15-ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் 100 மையங்களில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும், கரோனாவால் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் தர வேண்டும், முடங்கியுள்ள புதுச்சேரி அரசு நிர்வாகம் செயல்பட வலியுறுத்தி வரும் 15-ல் புதுச்சேரி, காரைக் காலில் 100 மையங்களில் ஆர் ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சலீம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று அவர் புதுச்சேரி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகேதாட்டுவில் தற்போது அணைகட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசுஇறங்கியுள்ளது. இவ்விஷயத்தில் உறுதியான எதிர்ப்பை புதுச்சேரி அரசு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி அரசும்அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். தென்பெண்ணை யாற்றில் பெரிய அணையை கர்நாடக அரசு கட்டி முடித்துள்ளது. இதனாலும் பாகூர் உள்ளிட்ட புதுச்சேரி பகுதிக்கும் பெரும்பாதிப்பு உள்ளது. இவ்விஷயங்க ளில் மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு அழுத்தம் தர வேண்டும். ஆனால் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கில் புதுச்சே ரியை ஒட்டிய மாநிலங்களில் மக்களுக்கு நிவாரணத்தொகை, உணவுப்பொருட்கள் தரப்பட்ட சூழலில் புதுச்சேரி மக்கள் கைவிடப் பட்டார்கள். என்ஆர் காங்கிரஸும் - பாஜகவும் களப்பணியாற்றாமல் பதவிச் சண்டையில் மூழ்கி மக்களை மறந்துவிட்டனர். தற் போது மக்களுக்கு உடனடியாக தேவைப்படுகிற நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம், 10 கிலோ அரிசி உட்பட அத்தியாவசிய உணவுபொருட்களை வழங்க வேண்டும்.

முடங்கியுள்ள புதுச்சேரி அரசு நிர் வாகத்தை செயல்பட அறிவுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் 100 மையங்களில் வரும் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று தெரிவித்தார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கட்சி நிர்வாகிகள் சேதுசெல்வம், கீதநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT