தமிழகம்

பிஹார் தேர்தலைப் போல தமிழகம், புதுச்சேரி தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு: மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா நம்பிக்கை

செய்திப்பிரிவு

பிஹார் தேர்தலைப் போல தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவை தேர்தல்களில் பெண்க ளுக்குப் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்ப்பதாக மகளிர் காங்கி ரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா தெரி வித்தார். புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்த அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் நக்மா கூறியதாவது:

தமிழகத்தில் இளைஞர்களுக் குப் போதிய வேலைவாய்ப்பு இல்லை. டாஸ்மாக் மதுக்கடை களை மூட எந்த நடவடிக்கையை யும் அரசு எடுக்கவில்லை. ஒரு புறம் தாலிக்கு தங்கம் வழங்கிவிட்டு, மதுவால் கணவர் கள் உயிரையும் பறித்துவிடு கின்றனர். இதனால் தமிழகத்தில் விதவைகள் அதிகமாக உள்ள னர். இலவசங்களைக் காண் பித்து மக்களை ஏமாற்றி வரு கின்றனர்.

மத்திய பாஜக அரசு மற்றும் புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசு இரண்டும் மக்கள் விரோதபோக்கில் செயல்படுகின்றன. முதல்வர் ரங்கசாமி அரசு ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்பெற்று மக்களைக் கடன் சுமையில் தள்ளியுள்ளது. உள்கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவில்லை. தரமற்ற இலவச மிக்சி, கிரைண்டர்களை வழங்கி உள்ளது. இதற்கு ரூ.50 கோடி பாக்கி வைத்துள்ளது. புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசு வாய்ப்பு தரவில்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் மகளிருக்கு அதிக பிரதி நிதித்துவம் தர சோனியா காந்தி விரும்புகிறார். குறிப் பாக, பிஹாரைப் போல தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேர வைத் தேர்தல்களில் மகளிருக் குப் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கி றோம். இது தொடர்பாக கட்சித் தலைமையிடமும் தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு நக்மா குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT