தமிழகம்

அதிமுக விரைவில் சசிகலா தலைமையில் இயங்கும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

செய்திப்பிரிவு

மயிலாடுதுறையில் நேற்று கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர் களிடம் கூறியது:

கொங்குநாடு என்று தனி மாநிலமாக பிரிப்பதற்கு இங்கு இப்போது யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. நீட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. ஆனால், சட்டரீதியாக அதை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை யில் தமிழகம் உள்ளது. இந்த ஆண்டில் முடியாவிட்டாலும், அடுத்த ஆண்டு தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் 3 தவறான முடிவுகளே காரணம். திடீர் பண மதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, முன்னறிவிப் பில்லாத ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக, அனைத்து தொழில் களும் முடங்கின. தொழில்கள் மூலம் வரி வருவாய் இல்லாத காரணத்தால், 130 கோடி மக்களுக் கும் வரி விதிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.

தனக்கு விசுவாசமானவர்க ளுக்கு மட்டுமே மோடி மத்திய அமைச்சர் பதவி வழங்கி உள்ளார். மேகேதாட்டு பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி, தமிழக அரசுக்கு உறுதுணையாக செயல்படும்.

இரட்டை தலைமையின்கீழ் அதிமுக செயல்பட முடியாது. தற்போது உள்ள சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது, அதிமுக விரைவில் சசிகலா தலைமையின் கீழ் இயங்கும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ராஜகுமார் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT