தலைமைச் செயலாளரின் அறிவு றுத்தலை மீறி உளுந்தூர்பேட்டை அருகே சாலை மட்டத்தை உயர்த்தி புதுப்பிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் முதல் நைனார்குப்பம் கிராமம் வரையிலான 1,200 மீட்டர் தார் சாலை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையால் இரு ஆண்டுக ளுக்கு முன்னரே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடப்பில் உள்ள பணிகளை செயல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசு அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடங்காத ஒப்பந்த பணிகளை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தம் கோரி, ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஏற்கெனவே பணியை எடுத்தவர்கள் தற்போது பணிகளை வேகமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் நகர் - நைனார்குப்பம் வரையிலான சாலை புதுப்பிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
பணியின் ஒப்பந்ததாரர் ஏற்கெனவே உள்ள தார்சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கீறல்களை ஏற்படுத்திவிட்டு, அதன் மீது கான்கிரீட் கலவைகளை கொட்டி, அதன்மீது அழுத்தம் தரும் இயந்திரத்தை இயக்கி சாலை அமைத்து வருகிறார்.
தமிழக தலைமைச் செயலா ளர் வெ.இறையன்பு சாலை புதுப் பிக்கும் பணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். அதன்படி சாலை அமைக்கும்போது அதன் மட்டம் உயராத வகையில் ஏற்கெனவே போடபட்டு சேதம டைந்த சாலைகளில் அவற்றை அகற்றிவிட்டு அதன் பின்னர் புதிய சாலை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
அவரது அறிவுறுத்தலுக்கு மாறாக சாலை போடப்படுவது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்ட போது, “இரு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒப்பந்த பணி. அவரது நிபந்தனை இதற்கு பொருந்தாதது” என்றார்.
இதையடுத்து உளுந்தூர் பேட்டை நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாளர் கவிதாவிடம் கேட்டபோது, “தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல் நகரப் பகுதிகளுக்கு மட்டுமே. ஊரகப் பகுதிக ளுக்கு அது பொருந்தாது” என்கி றார். நகரப் பகுதியோ, ஊரகப் பகுதியோ எதுவாயினும் சாலை மட்டம் உயரக்கூடாது என்பது தான் தலைமை செயலாளரின் உத்தரவு என்பது பொறியாளருக்கு தெரியவில்லை என்பது வியப்பு தான்.