பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் அனுப்பும் போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேம பஞ்ச காந்தி தலைமையில் நிர்வாகிகள் ஆம்பூர் சாலையில் இருந்து ஊர்வலமாக சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமை தபால் நிலையம் வந்தனர்.
இதுதொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிரதமருக்கு சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் உள்ளிட்டவைகளை அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளோம். விலை உயர்வால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதை தெரிவிக்கும் வகையில் இதை அனுப்பியுள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.