தமிழகம்

கேரளத்தை சேர்ந்த பெண் பழநியில் பலாத்காரம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

கேரள பெண் ஒருவர் பழநியில் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம், கண்ணணூர் அருகே தலைச்சேரியைச் சேர்ந்தவர் தங்கம்மாள்(45). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். மருத்துவர் காயம் குறித்து விசாரித்தார். அதற்கு, கணவருடன் பழநி கோயிலுக்கு ஜூன் 19-ல் சென்றதாகவும், அங்கு கணவரைத் தாக்கிவிட்டு 3 பேர் தன்னைக் கடத்திச் சென்று விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததால் காயம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்த புகாரை பழநி அடிவாரம் போலீஸார் வாங்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கண்ணனூர் போலீஸாரிடம் புகார் செய்தனர். தமிழகத்தில் ஏற்பட்ட சம்பவம் என்பதால், கேரள மாநில டி.ஜி.பி.க்கு கண்ணனூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள டி.ஜி.பி. அணில்காந்த், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேரள பெண் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியாவுக்கு டி.ஜிபி. உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், தங்கம்மாள்(45) தர்மராஜ்(35) என்பவருடன் ஜூன் 19-ல் கேரளாவில் இருந்து ரயில் மூலம் பழநி வந்ததும், 2 நாட்கள் அடிவாரத்தில் உள்ள விடுதியில் தங்கியதும் உறுதியானது.

விடுதி ஊழியர்கள் போலீஸாரிடம், `இருவரும் தாய், மகன் எனக் கூறி 2 நாட்கள் தங்கி னர். அப்போது வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். விடுதியில் இருந்து அவர்கள் செல்லும்வரை எந்த சம்பவமும் நடைபெறவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் உள்ள கேமரா பதிவுகளும் ஏழு நாட்கள் மட்டும் இருக்கும் என்பதால் சிசிடிவி பதிவுகளும் கிடைக்கவில்லை. பழநி அடிவாரம் போலீஸாரிடம் விசாரித்ததில், தங்களிடம் புகார் அளிக்க யாரும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இருவரும் கணவன், மனைவி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட கேரள பெண்ணை பழநிக்கு அழைத்து வந்து விசாரிக்க தனிப் படையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறத

SCROLL FOR NEXT