பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(43). இவர் இந்திய ராணுவத்தில் 23 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். கடந்த 50 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சங்கர் பின்னர், அவர் பணிபுரியும் மேற்குவங்க மாநிலத்துக்கு திரும்பிச் சென்றார். இந்நிலையில் அவர் பணியின்போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள், சங்கரின் குடும்பத்தினருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த சங்கரின் உடல், ராணுவ நடைமுறைகள் முடிந்து இன்று(ஜூலை 12) அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படும் என கூறப்படுகிறது. உயிரிழந்த சங்கருக்கு ஜெகதீஸ்வரி(37) என்ற மனைவியும், விஷால்(11), ரித்தியன்(7) என இரு மகன்களும் உள்ளனர். ராணுவ வீரர் சங்கர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததால் காரை கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.