தமிழகம்

ஜெ. பிறந்த தின பொதுக்கூட்டங்கள்: அதிமுக அறிவிப்பு

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிப்.24 முதல் 26 வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சி தலைமை அலுவலகம் அறி விப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த தினம் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப் படுகிறது.

இதையொட்டி, அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள், அதிமுக செயல்பட்டு வரும் புதுச்சேரி, கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளன. இதற்கான அறிவிப்பு அதிமுக தலைமை அலுவல கத்தால் நேற்று வெளியிடப் பட்டது.

SCROLL FOR NEXT