நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் நீதிமன் றத்தை அவமதித்து, பணிகளில் குறுக்கீடு செய்ததாக கடந்த 16.9.15 அன்று நீதிபதிகள் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த அவமதிப்பு வழக்கு சென் னைக்கு மாற்றப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பாக விசாரிக்கப் பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் மறுத்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பீட்டர் ரமேஷ்குமார் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, பிப்ரவரி 22-ம் தேதி தண்டனை வழங்குவதாக அறிவித்தனர்.
அதன்படி, நேற்று நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘வழக் கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் மீது சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை அவர் ஒரு வாரத்துக்குள் செலுத்தி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதுவரை சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும். மேலும் அவர் மீது உயர் நீதிமன்ற விதிகள்படியும், வழக்கறிஞர் நன்னடத்தை விதிகளின்படியும் தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்படுகிறது. ஒருவேளை அவர் மேல்முறையீடு செய்யா விட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டாலோ அவரை புழல் சிறையில் அடைக்க உயர் நீதிமன்ற பதிவுத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிமன்ற அவமதிப்புக்காக வழக்கறிஞர் ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.