தமிழகம்

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காவல் அதிகாரிகளை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை

செய்திப்பிரிவு

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காவல் துறை அதிகாரிகளைப் பிடிக்க, சிபிசிஐடி பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2019-ல் கடத்தி, சொத்துகளை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மற்றும் தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாச ராவ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக டிஜிபிஉத்தரவின் பேரில், திருமங்கலம்காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன்,உதவி ஆய்வாளர் பாண்டியராஜன்,அப்போது காவலர்களாக இருந்தகிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோரைக் கைது செய்ய சிபிசிஐடி தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தேடும் பணி தீவிரம்

தலைமறைவாக உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

உதவி ஆணையர் சிவக்குமார்ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT