தமிழகம்

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கத்தரி, அவரைக்காய் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த இரு மாதங்களாக காய்கறி விலை குறைந்தே காணப்படுகிறது. தற்போது பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக தக்காளி, நூக்கல், கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய், முட்டைக்கோஸ் ஆகியவை கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும், இதர காய்கறிகளான பீன்ஸ்,வெண்டைக்காய், வெங்காயம், முருங்கைக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20,பீட்ரூட் ரூ.15, பாகற்காய் ரூ.25, கேரட்,முள்ளங்கி ரூ.18 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சிஅடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

சென்னையில் ஊரடங்கு விதிகளால்திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்துவிட்டன. ஊரடங்கு, வேலைவாய்ப்பு இழப்பு போன்ற காரணங்களால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தற்போதுதான் மெல்ல சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் காய்கறிகள் விற்பனை அளவு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் காய்கறிகள் வரத்து குறையாமல் வழக்கம் போல் உள்ளது. இதன் காரணமாக பலகாய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சென்னை திரும்பி வருகின்றன. அடுத்த வாரம் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT