பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 10) வெளியிட்ட அரசாணையில், அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் எனக் கட்டுப்பாடு இருந்தது.

மற்ற அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை, 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என்று மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT