தமிழகம்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயும்

செய்திப்பிரிவு

கோயில்களின் மேம்பாடு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, "கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் நிலங்களில் குழுவாக குடியிருப்பவர்களை வாடகைதாரராக அங்கீகரித்து, பெயர் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT