ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வானங்களை டயர் வண்டியில் வைத்து இழுத்துச்சென்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் கட்சியினர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

மோடியின் தோல்வியால் அமைச்சர்கள் மாற்றம்: வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் பெட்ரோல் பங்க் முன்பு நேற்று மாலை கையெழுத்து இயக்கம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி டயர் வண்டி யில் பைக்குகள், எரிவாயு சிலிண் டருக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் டயர் வண்டியை பழைய ஆட்சியர் அலுவலகம் வரை இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்குக்கு வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இதன் பின்னர் வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு கடுமையான விலை உயர்வை சந்தித்துக் கொண் டிருக்கிறது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசு காதிருந்தும் கேட்காத செவிட்டு அரசாகவும், கண்ணிருந்தும் பார்க்காத குருட்டு அரசாகவும் இருக்கிறது.

மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளாமல், அவர்க ளுக்கு வேண்டிய உதவிகளை செய்யாமல் இருக்கின்றனர். இந்த விலை உயர்வை குறைக்கக்கோரி ராகுல்காந்தி ஏற்கெனவே பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதற்கு செவி சாய்க்காமல் இருக்கின்றனர். மோடியின் தோல் வியின் காரணமாகத்தான் மத்தியில் இருக்கின்ற சுகாதாரத்துறை, பெட்ரோலியத் துறை அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இதுவே அவருடைய தோல்வியை ஒப்புக்கொள்கின்ற நிலையில் இருக்கிறது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே வாபஸ்பெற வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT