ராமேசுவரத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பக்தர்கள். 
தமிழகம்

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

செய்திப்பிரிவு

ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக் தர்கள் புனித நீராடினார்கள்.

சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்க ளுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்.

முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தை பூர்த்தி செய்ய இந்துக்கள் தை, மாசி, ஆனி, ஆடி மற்றும் மஹாளய அமாவாசைகளில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள்.

ராமேசுவரத்தில் ஆனி அமாவாசை தினத்தன்று முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்ய பக் தர்கள் ராமேசுவரத்தில் குவிவது வழக்கம்.

நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல் வேறுப் பகுதிகளிலிருந்தும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப் பணம் செய்தனர்.

முன்னதாக ஆனி அமாவாசை யை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையே ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராம நாதசுவாமி-பர்வதவர்த்தினி அம் மனை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT