கோப்புப் படம் 
தமிழகம்

செங்கை, காஞ்சி மாவட்ட ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இல்லை: ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்

செய்திப்பிரிவு

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படாததால் மக்கள்ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,363 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களிலும் 75 சதவீத மக்கள் ரேஷன் பொருட்களை நம்பியுள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதிய அளவு வரத்து இல்லாததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு விநியோகம் செய்யப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் துவரம் பருப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன்செல்கின்றனர். மேலும் கடைகளுக்கு மற்ற பொருட்கள் சரிவர கிடங்கில் இருந்து விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகாரை கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது: மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இப்பிரச்சினை நிலவி வருகிறது. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இருப்பு இல்லை. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், இன்னும் கிடங்குக்கு பருப்பு வரவில்லை. மற்ற பொருட்கள் ஓரிருதினங்களில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

SCROLL FOR NEXT