மா.சுப்பிரமணியன் 
தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மத்திய அரசு சார்பில் 150 மாண வர்கள் சேர்க்கை இடங்களை அனுமதித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிிவித்தார்.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு குறுகிய காலத்தில் இரண்டாவது அலையை சிறப்பாக சமாளித்ததாக உச்சநீதிமன்றம் பாராட்டியது.

மூன்றாவது அலை வந்தால் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளோம். குழந் தைகளுக்கென சிறப்பு வார்டுகள், ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் போன்ற வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் நிர்ணயித்த ஆம்பு லன்ஸ் கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் 1200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பெரியளவில் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

தடுப்பு மருந்து பாகுபாடு இன்றி அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் இருந்து கிடைத்த தடுப்பூசிகளில் ஒரு கோடியே 59 லட்சத்துக்கு மேல் இதுவரை போடப்பட்டுள்ளது. எவ்வளவு தடுப்பூசி வந்தாலும், தினமும் மாவட்டந்தோறும் பிரித்து கொடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் முகாம்கள் நடத்தி செலுத்தப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மத்திய அரசு சார்பில் 150 மாணவர்கள் சேர்க்கை இடங்களை அனுமதித்துள்ளனர். தற்போது, இதில் நான்கு வகை ஆலோசனைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது, அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பது, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ப்பது என நான்கு ஆலோசனைகளும் ஏற்புடையதாக இல்லை. இதற்கு முதல்வர் மாற்று கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இன்னும் நான்கு நாட்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச் சரிடம் நேரம் கேட்டு சந்திக்க உள் ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT