தமிழகம்

தமிழக சட்டப்பேரவையின் 14-வது கூட்டம் நிறைவு பெற்றது: 5 ஆண்டுகளில் 918 மணி நேரம் நடந்த பேரவை

செய்திப்பிரிவு

தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவை கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் 197 நாட்கள், 918 மணி நேரம் அலுவல்கள் நடந்துள்ளதாக பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மே 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பதவியேற்றது. 5 ஆண்டு கால அதிமுக அரசின், அதாவது 14-வது சட்டப்பேரவை யின் இறுதிக் கூட்டம் நேற்று பிற்பகல் 2.55 மணிக்கு நிறைவு பெற்றது.

கூட்டத்தின் நிறைவில் பேர வைத் தலைவர் பி.தனபால் பேசிய தாவது:

கடந்த 5 ஆண்டுகளில் 11 முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந் துள்ளது. முதல் கூட்டத் தொடர் 2011 மே 23-ம் தேதி தொடங்கியது. 5 ஆண்டுகளில் 197 நாட்கள் பேர வைக் கூட்டம் நடந்தது. 3 நாட்கள் மாலையிலும் கூட்டம் நடந்தது. மொத்தம் 918 மணி 31 நிமிடங்கள் அலுவல்கள் நடந்துள்ளன.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானங்கள் மீதான விவாதமும், பதிலுரையும் 22 நாட் கள் நடந்தன. 158 உறுப்பினர்கள் 58 மணி நேரம் உரையாற்றினர். முதல்வர் ஜெயலலிதா 7 மணி 28 நிமிடங்கள் பதிலுரை ஆற்றியுள்ளார்.

நிநிநிலை அறிக்கை மீதான விவாதமும், பதிலுரையும் 26 நாட்கள் நடந்துள்ளன. 177 உறுப்பினர்கள் 67 மணி 9 நிமிடங்கள் பேசினர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 மணி 5 நிமிடம் பதிலுரை வழங்கினார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 112 நாட் கள் நடைபெற்றன. 840 உறுப் பினர்கள் 231 மணி 40 நிமிடங்கள் பேசியுள்ளனர். அமைச்சர்கள் 138 மணி 10 நிமிடங்கள் பதிலுரை வழங்கினர்.

66,497 வினாக்கள்

இந்த 5 ஆண்டுகளில் 188 உறுப் பினர்கள் 66,497 வினாக்களை அளித்துள்ளனர். அவற்றில் 43,060 வினாக்கள் அனுமதிக்கப்பட்டு 1,853 வினாக்களுக்கு விடையளிக் கப்பட்டன. 4,477 துணை வினாக்கள் கேட்கப்பட்டன. அதிகபட்சமாக எம்.குணசேகரன் (அதிமுக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் 33 மூல வினாக்களை எழுப்பினர். அதிகபட்சமாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 120 வினாக்களுக்கு விடை அளித்துள்ளார்.

35 சிறப்பு தீர்மானங்கள்

பேரவையில் மொத்தம் 35 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு 159 உறுப்பினர்கள் 7 மணி 4 நிமிடங் கள் பேசியுள்ளனர். 59 முக்கியப் பிரச்சினைகளின் மீது 135 உறுப் பினர்கள் பேசியுள்ளனர். 3,097 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் பெறப்பட்டு 1,317 தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டன. பேரவையில் 44 தீர்மானங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. 170 சட்ட முன் வடிவுகளும், 18 அரசினர் தனித் தீர்மானங்களும் நிறைவேற் றப்பட்டுள்ளன. 1,848 அறிக்கை கள், அறிவிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 28 உறுப்பினர்கள் அனைத்து நாட்களிலும் பேரவை நடவடிக்கை களில் பங்கேற்றுள்ளனர். 18,368 பெண்கள் உட்பட 1 லட்சத்து 15 ஆயிரத்து 441 பார்வையாளர்கள், பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார்.

SCROLL FOR NEXT