தமிழகம்

அத்திக்கடவு-அவிநாசி திட்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செய்திப்பிரிவு

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் நேற்று இரவு போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 13-வது நாளாகவும், கோவை மாவட்டம் அன்னூரில் 9-வது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பெருமாநல்லூர், குன்னத்தூர், சேவூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாயிகள் மொட்டையடித்தல், சர்வமத பிரார்த்தனை, தீர்த்தக்குடம் ஏந்துதல் என பல வகையில் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.3.27 கோடி ஒதுக்கி கள ஆய்வு செய்யவும், திட்ட சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தவும் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் என அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் பேசிய அத்திக் கடவு-அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டப் போராட்டக் குழு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவரான வி.கணேசன் கூறும் போது, ‘தமிழக அரசின் அறிவிப்பு எங்களது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டோம்’ என்றார்.

அவிநாசியில் 13-வது நாளாகவும், கோவை மாவட்டம் அன்னூரில் 9-வது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

SCROLL FOR NEXT