ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தடகள வீராங்கனை ரேவதியை பாராட்டும் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் மற்றும் பேராசிரியைகள். 
தமிழகம்

ஒலிம்பிக் போட்டியில் ரேவதி வெற்றி வாகை சூடுவார்: டோக் பெருமாட்டி கல்லூரி நிர்வாகம் வாழ்த்து

செய்திப்பிரிவு

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவியும், மதுரை கோட்ட ரயில்வே ஊழியருமான தடகள வீராங்கனை ரேவதி வெற்றி வாகை சூடுவார் என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறி க்கை: தடகள வீராங்கனை ரேவதி, எங்கள் கல்லூரியில் தமிழ்த் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அவர் டோக்கியோவில் நடக்க வுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வறுமையின் பிடியிலும், தடை களைத் தாண்டி முன்னேறியவர். காற்றைவிட வேகமாக ஓடக்கூடி யவர். அவர் மிகவும் கடினமான பயிற்சிகளை எடுத்ததையும் கண்டுள்ளோம். அவரது அயராத முயற்சி, பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறோம். அவரை பாராட்டுவதில் பெருமை அடைகிறோம். புலியின் கால் களுடனும், காற்றின் வேகத்துடனும் ஒலிம்பிக்கில் களமிறங்கும் சிங்கப் பெண் ரேவதி வெற்றிவாகை சூட வாழ்த்துகள் என அக்கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT