தமிழகம்

கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கல்வியை மீண்டும் மாநில பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று சென்னையில் நடந்த கல்வியாளர் கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் கல்வியாளர்கள் ஆலோ சனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் துணை வேந்தர் வி.வசந்திதேவி தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட் டத்தில் சமச்சீர் கல்விக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் கல்வி யாளருமான எஸ்.எஸ்.ராச கோபாலன், மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் பேரா சிரியர் மு.நாகநாதன் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற னர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச் சிக்கு (மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை) அரசியல் கட்சிகள் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவா திக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப் பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:-

அனைத்து வளர்ந்த நாடுகளிலும் வளரும் முன்னணி நாடுகளிலும் பின்பற்றப்படும் பொதுப்பள்ளி முறை - அருகமைப்பள்ளி அமைப்பு முறையில் தாய்மொழி வழியில் அனைவருக்கும் கட்டணம் இல் லாமல் கல்வி வழங்க வேண்டும்.

அரசுப்பள்ளிகள் மற்றும் கல் லூரிகளை மேம்படுத்த கல்விக் கான நிதி ஒதுக்கீடுகளை அதி கரிக்க வேண்டும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுக்க தொடக் கப் பள்ளிகள் முதலாக தேர்ச்சி பெற்ற திறமையுடைய ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண் டும்.

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

பருவத் தேர்வு

தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பாடத்தை மட்டும் 2 ஆண்டுகள் மனப்பாடம் செய்யவைக்கும் தவறான அணுகுமுறையால், அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறி போவதைத் தடுக்க பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் பருவத் தேர்வு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும்.

வெளிநாட்டு உயர்கல்வி நிறு வன அனுமதியை விலக்கிக் கொள்ளவேண்டும், மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக் கப்பட்டதாக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சு.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT